இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் (Redmi) ரெட்மி குறைந்த பட்ஜெட் என்பதனால் அதிகளவில் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போனாக உள்ளது. ஜியோமி(Xiaomi ) என்ற நிறுவனம் தான் ரெட்மி (Redmi) ஸ்மார்ட் போனை தயாரித்து வருகிறது.
ஆகஸ்ட் 25 முதல் 30ஆம் தேதி வரை சியோமி நிறுவனம் 50% தள்ளுபடியைக் கொண்டு வந்துள்ளது. ரெட்மி ஸ்மார்ட்போனுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் பேட்டரி மாற்றிக் கொள்ளலாம் மற்றும் பராமரிப்பு, இணைப்புச் சேவைகளுக்கு ஒரு வாரம் வரை சிறப்பு சலுகை அறிவித்துள்ளது சியோமி நிறுவனம்.
