மராட்டியம் மாநிலத்தில் போர்ஜூனி கிராமத்தில் வசித்து வரும் சஞ்சீவானி என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அவர் தன் கணவருடன் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த நிலையில் லகான் பண்டாரே என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் கள்ளக்காதலன் அந்த பெண்ணை அவருடைய வீடு தேடிச் சென்று சந்தித்து வந்த நிலையில் இந்த விஷயம் பெண்ணின் மாமியாருக்கு தெரிய வந்ததால் அவர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று தன்னுடைய மருமகளையும் அவருடைய கள்ளக்காதலனையும் கையும் களவுமாக பிடித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை, தாத்தா மற்றும் உறவினர் ஒருவர் அங்கு விரைந்து வந்து தங்களது குடும்பப் பெண் கள்ளக்காதலனுடன் சிக்கியதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
பிறகு கள்ளக்காதல் ஜோடியை அங்கிருந்து அழைத்துச் சென்று போகும் வழியில் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து அங்கிருந்த ஒரு கிணற்றில் கள்ளக்காதல் ஜோடியின் கை கால்களை கட்டி அவர்களை ஈவு இரக்கமில்லாமல் கிணற்றில் வீசி கொலை செய்தனர்.. இதனைத் தொடர்ந்து கிணற்றில் இரண்டு சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
