மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் மற்றும் துருக்கி மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் தற்போது புதிய ‘நான்கு அம்ச சூத்திரத்தை’ முன்வைத்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தை தணிக்க ஐக்கிய அரபு அமீரக இளவரசருடனான சந்திப்பின் போது ஜின்பிங் இந்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் உலகம் மீண்டும் காட்டுமிராண்டித்தனமான ஆட்சிக்கு திரும்பக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், சக்திவாய்ந்த நாடுகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஈரான் போன்ற இறையாண்மை கொண்ட நாடுகளின் அரசாங்கத்தை அங்கீகரிப்பதன் மூலமே பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்றும் வலியுறுத்தினார்.
இதனால் அமைதியை நிலைநாட்ட ஜின்பிங் முன்வைத்துள்ள இந்த சூத்திரத்தில், நாடுகள் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தக்கூடாது, சதித் திட்டங்களில் ஈடுபடக்கூடாது மற்றும் அழுத்தங்கள் மூலம் அமைதியைக் கொண்டுவருவதை விட நேரடி உரையாடல்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள சீனா, தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சீனப் பயணத்திற்கு முன்னதாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், சீனாவின் இந்தத் தலையீடு சர்வதேச அரசியலில் மிக முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…