உலகளவில் பெரும் அழிவை சந்தித்து வரும் விலங்குகள்… சிட்னி பல்கலைகழக ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…

By Meena on பிப்ரவரி 10, 2025

Spread the love

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல விதவிதமான விலங்குகள் இருந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரை எடுத்துக் கொள்ளலாம். அது காலப்போக்கில் அழிந்தே போய்விட்டது. அது போல தற்போதைய காலகட்டத்தில் கூட ஒரு சில விலங்குகளை அழிவின் விளிம்பில் இருப்பதாக கூட அறிவித்து அதை பாதுகாத்து வருகிறார்கள். தற்போது அதற்கும் மேலாக போய் உலக அளவில் இருக்கும் அனைத்து விலங்குகளும் ஒரு ஆபத்தை அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று சிட்னி பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியிருக்கிறது. அதை பற்றி இனி காண்போம்.

   

உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு விலங்குகள் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் தன்மை குறைந்து இருப்பது சிட்னி பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியில் வெளிவந்து இருக்கிறது. இதனால் விலங்குகள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. உலக அளவில் கோடிக்கணக்கான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் இருக்கின்றன. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை குறையும் போது இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

   

சிட்னி பல்கலைக்கழகம் விலங்குகளின் ரோமம் மலம் உள்ளிட்டவைகளை சேகரித்து ஆய்வு செய்தது. இதில் மூன்றில் இரண்டு பங்கு விலங்குகளின் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் தன்மை குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 1985 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரையிலான காலத்தில் 28 வகையான தாவரங்கள் விலங்குகள் மற்றும் பறவைகளின் தன்மை குறித்த ஆய்வுகளும் செய்யப்பட்டது. இதற்கு முக்கிய உதாரணமாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

 

மரபணு பரவல் குறையும் போது புதிதாக உருவாகும் நோய்கள் வெப்ப அலை சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற எதிர்கால சவால்களை குறிப்பிட்ட விலங்குகளால் எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும். மக்கள் இடமாற்றம், மனிதர்களால் உருவான காலநிலை மாற்றம் இயற்கை பேரிடர் போன்ற காரணங்களினால் இந்த ஆபத்துகளை தாங்க இயலாத விலங்குகள் எண்ணிக்கை குறைந்து ஒரு கட்டத்தில் அழிந்தே போய்விடும் என்று கூறுகிறார்கள். இதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தும் வருகிறார்கள்.