காரிலேயே மினி Departmental store… அனைவரின் கவனத்தை ஈரத்த Uber டிரைவரின் புதிய முயற்சி…

By admin on மாசி 10, 2025

Spread the love

ஒவ்வொருவரும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப வேலையோ சொந்த தொழிலோ செய்வார்கள். ஒவ்வொருவர் தாங்கள் செய்யும் வேலையை ஒரு படி மேலாக கொண்டு போய் அதை வித்தியாசமாக வெளிப்படுத்துவார்கள். அது பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் தனித்துவமாகவும் இருக்கும். இது அவர்கள் அந்த வேலைக்கு மேலாக இருக்கக்கூடிய ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாக தான் இருக்கும். அப்படி ஒரு யூபர் டிரைவர் ஆனவர் தனது காரையே ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டாக மாற்றியிருக்கிறார். அது எதற்காக என்பதை பற்றி காண்போம்.

   

இன்றைய காலகட்டத்தில் வாடகைக்கார்களான Uber Ola போன்ற சேவைகள் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. டெல்லியில் Uber கார் டிரைவர் ஒருவர் தனது புதுமையான யோசனையால் வாடிக்கையாளர் மற்றும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

   

டெல்லியின் Uber கார் ஓட்டுனரான அப்துல் காதர் என்பவர் காரில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறார். இவர் கார் சவாரியின் போது வாடிக்கையாளர்களுக்கு தேவையான இலவச ஸ்னாக்ஸ், தண்ணீர், Wifi, வாசனை திரவியங்கள், மருந்துகள், கையடக்க மின்விசிறிகள், Tissue, சானிடைசர்கள் மற்றும் ஏழை குழந்தைகளுக்கான டொனேஷன் பாக்ஸ் என பல்வேறு வசதிகளை இவரது காரில் வைத்திருக்கிறார்.

 

இவர் கார் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக எல்லோரும் கார் ஓட்டுவதைப் போல் இல்லாமல் இவர் வித்தியாசமாக ஒரு மினி சூப்பர் மார்க்கெட் போலவே தனது காரில் வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறார். இவருடன் பயணிக்கும் போது எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் கூறியிருக்கிறார்கள். புதுவிதமான பலவிதமான செல்களை நாளுக்கு நாள் அன்றாடம் யாராவது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.