தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து அர்ஜுன் மற்றும் ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இறுதியாக அஜித் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பு துணிவு திரைப்படம் வெளியான நிலையில் தற்போது ரசிகர்களின் இரண்டு வருட எதிர்பார்ப்புக்கு பிறகு விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூலிலும் அடி வாங்கியுள்ளது.
இப்படியான நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில், மகிழ் திருமேனி கடந்த சில நாட்களாகவே பாலை அஜித் பக்கம் தள்ளி விட்டுட்டே இருக்காரு. வழக்கமா மற்ற இயக்குனர்கள் இந்த படம் நல்லா இருக்கும் எல்லாரும் கண்டிப்பா வந்து பாருங்க என்றுதான் பேட்டி கொடுப்பாங்க. ஆனால் மகிழ்திருமேனி சமீபகாலமாக விடாமுயற்சி பிரமோஷனுக்காக அளித்த பேட்டியில், யாரும் அதிகமாக எதிர்பார்த்து வராதீங்க நம்பாதீங்க என்று ரசிகர்களை திசை திருப்புவது போலவே பேசி வந்தார். அது மட்டுமல்லாமல் விடாமுயற்சி கதையே அஜித் கொடுத்தது தான் என்றும் கூறியிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஒருவேளை விடாமுயற்சி திரைப்படம் மொக்கையாக இருந்தால் என்னை யாரும் கேட்காதீங்க எல்லா கேள்வியும் அஜித்தை பார்த்து கேளுங்க என்று சொல்வது போல தான் இருக்கு.
ஒருவேளை இவர் சொல்வது போல கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித் இந்த கதையை மகிழ் திருமேனியிடம் கொடுத்திருந்தால் சார் இந்த கதையை கமர்சியலா இருக்காது என்று சொல்லி நீங்கதான் அவர்கிட்ட புரிய வச்சு கதையை கொஞ்சம் மாத்தி அமைச்சிருக்கணும். இந்த படம் பான் இந்தியா படம் கிடையாது. அஜித்தும் பான் இந்தியா நடிகர் இல்லை. அஜித்தை பொருத்தவரைக்கும் தமிழ்நாட்டில் தான் அதிக ரசிகர்கள் இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் விஜய்க்கு இருக்கக்கூடிய ரசிகர்கள் கூட அஜித்துக்கு இல்லை. ஆந்திராவில் சூர்யாவுக்கு இருக்கக்கூடிய ரசிகர்களில் ஒரு சதவீதம் கூட அஜித்துக்கு இல்லை.
ஆங்காங்கே சில ரசிகர்கள் கூட்டம் மட்டுமே உள்ளது. விடாமுயற்சி திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே மொக்கையான படம் என்று சொல்லிட்டாங்க. ஆந்திராவில் லட்சங்களில் தான் வசூல் செய்யும் எனவும் கூறுகிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் லைகா தானாக முன்வந்து விநியோகஸ்தர்கள் மூலமாக படத்தை ரிலீஸ் செய்துள்ளது. இதனால் 200 கோடி வரை நஷ்டம் ஏற்பட போகுது. தமிழகத்தில் 35 கோடி வசூல் செய்வதை பெரிய கஷ்டம் எனக் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மகிழ் திருமேனி சினிமா வாழ்க்கையில் இதுவே கடைசி படமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என விடாமுயற்சி திரைப்படத்தை வலைப்பேச்சு பிஸ்மி விமர்சித்து பேசியுள்ளார்