LG நிறுவனமானது உலகத்தில் முதல் முறையாக Transparent TVயை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலையை கேட்டால் தலையே சுற்றிவிடும். அதன் சிறப்பம்சங்கள் என்ன விவரக்குறிப்புகள் என்ன விலை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
LG நிறுவனமானது CES2024 இல் இந்த தொலைக்காட்சியை முதன்முதலாக காட்சிப்படுத்தியது. இந்த டிரான்ஸ்பரென்ட் டிவியில் வயர்லெஸ் வீடியோ மற்றும் ஆடியோ டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தை சேர்த்துள்ளதாக கூறுகிறது. இந்த LG டிரான்ஸ்பரென்ட் டிவியில் ஆல்ஃபா 11 AI processor இணைக்கப்பட்டுள்ளது. இது சிறப்பாகவும் வேகமாகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதன் முந்தைய மாடல்களை விட 4 மடங்கு சிறந்த AI செயல்பாடு 70% சிறந்த கிராபிக்ஸ் செயல்பாடு 30 சதவீதம் கூடுதல் வேகத்துடன் இந்த LG டிரான்ஸ்போர்ட் டிவி இயங்குகிறது.
இந்த பெருமை மிகுந்த உலகின் முதல் Transparent TVயை LG நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. LG சிக்னேச்சர் OLED T என அழைக்கப்படும் இந்த ட்ரான்ஸ்பரென்ட் டிவி தற்போது அமெரிக்காவில் 60,000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் பார்க்க போனால் ரூபாய் 51 லட்சத்து 10 ஆயிரத்து 800 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலையை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு பெட் ரூம்கள் கொண்ட பிளாட்டை வாங்கி விடலாம் போலிருக்கிறது என்று பேசி வருகின்றனர்.