sav

அப்ரூவராக மாறிய மனோஜ்… விஜயாவிடம் அடி வாங்கிய ரோகிணி… சிறகடிக்க ஆசையில் இன்று…

By admin on மார்கழி 27, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மனோஜின் முன்னாள் காதலியான ஜீவாவை அழைத்து வந்து அவர் பணம் கொடுத்த விஷயத்தை வீட்டில் அனைவரின் முன்னிலையில் சொல்ல வைத்து விட்டார் முத்து. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் கோபத்தில் இருக்கின்றனர். விஜயா மனோஜின் சட்டையை பிடித்து என்னை ஏண்டா ஏமாத்துனே என்று கேட்கும்போது ரோகிணி தான் எல்லாம் கூறினார் என்று கூறுகின்றார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

   

இன்றைய எபிசோடில் விஜயா மனோஜின் சட்டையை பிடித்து நீ அவங்ககிட்ட மறைச்சிருந்தாலும் பரவால்ல என்கிட்டே நீ உண்மையை மறைச்சுட்ட இல்ல என்று கோபத்தோடு கேட்கிறார். அப்போது மனோஜ் அம்மா நான் எதுவுமே செய்யல ரோகிணி தான் அந்த பணத்தை வைத்து ஷோரூம் ஆரம்பிக்கலாம் அப்படின்னு ஐடியா கொடுத்தது எல்லாமே அவதான் என்று அப்ரூவராக மாறிவிட்டார்.

   

உடனே விஜயா கோபத்துடன் ரோகினி இடம் சென்று அப்போ நீ தான் எல்லா வேலையும் பண்ணியிருக்க உங்க அப்பா மலேசியாவில் இருந்து பணம் அனுப்பல இவர் பணத்துல தான் நீ கடைய ஆரம்பிச்சுருக்க என்று ஒரு அடி அடித்தார். உடனே ரோகினி அழுது கொண்டே ஆண்டி நான் உண்மைய சொல்லிடுறேன். நான் எல்லாம் மனோஜ்க்காக தான் பண்ணுனேன். நான் இந்த பணத்தை எடுத்து ஷோரூம் வைக்காம இருந்திருந்தா அவர் இன்னும் Park ல தான் சுத்திக்கிட்டு இருப்பாரு. நான் எவ்வளவோ வேலை அவருக்கு ப்ரோபைல் அனுப்பின ஒரு வேலையுமே அவரால செய்ய முடியல என்று கூறினார்.

 

உடனே விஜயா நீ அந்த பணத்தை எங்ககிட்ட வந்து கொடுத்திருந்தால் நாங்க அவனுக்கு ஏதாவது பண்ணிருப்போமே. நீ ஏன் அதை செய்யல என்று கேட்கும்போது நீங்க அம்மாவா இதுவரைக்கும் யாருமே மனோஜ்க்காக எதுவுமே செய்யல என்று கூறியவுடன் மறுபடியும் விஜயா கோபப்பட்டு ரோகினிக்கு அடி கொடுத்து அம்மாவா நான் எதுவுமே பண்ணலையா எல்லா இடத்திலுமே நான் அவனுக்காக தானே நான் நின்று இருக்கேன் என்று கூறுகிறார்.

உடனே அண்ணாமலை விஜயாவை அடிக்க வேண்டாம் என்று தடுக்கிறார். அப்போது விஜயா பாருங்க அவ எப்படி பேசுறான்னு எல்லா தப்பையும் இவ செஞ்சிட்டு மனோஜ் ஏதோ கையால் ஆகாதவன் அவனுக்கு ஒன்னும் தெரியாதுங்குற மாதிரி பேசுறா. அங்கிருந்து ரூமுக்குள்ளே போய் ரோகினி கதவை அடைத்து இருந்து விடுகிறார். மனோஜ் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார். விஜயா ரோகினியை அடிக்கும்போது மனோஜ் எதுவுமே தடுக்கவில்லை. இதனால் ரோகிணி மனோஜ் மீது கோபமடைந்து இருக்கிறார்.

அடுத்ததாக கிச்சனில் மீனா முத்து ரவி சுருதி நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சுருதி ரோகிணி இப்படி பண்ணுவாங்க நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை என்று கூறுகிறார். அடுத்ததாக முத்து அது சரியான கேடின்னு எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். இதுல பார்த்தியா மனோஜ் சைக்கிள் கேப்ல அவனும் சேர்ந்து எல்லா தப்பும் பண்ணிட்டு பொண்டாட்டி மேலயே அவ்ளோ பழியும் போட்டு அம்மாவை அடிக்க வச்சுட்டான். இவன்லாம் என்ன ஒரு நல்ல புருஷனா அதாவது அவன் காதலிச்ச பொண்ணு அவனுக்கு திறமை இல்லை ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அவ பொண்டாட்டி அவனுக்கு திறமை இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டா என் இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை மனோஜ் கேட்டுவிட்டு நேராக ரூமுக்கு செல்கிறார்.

ரோகினி உடனே கோபத்துடன் நான் உனக்காக தானே மனோஜ் எல்லாம் செஞ்சேன். ஆனா ஆண்ட்டி என்னை அடிக்கும் போது நீ தடுக்கலையே என்று கேட்கிறார். உடனே அதெல்லாம் இருக்கட்டும் ரோகினி நீ எதுக்கு என்னை கையால் ஆகாதவென்னு சொன்ன எல்லாரும் என்ன பத்தி கிண்டல் பண்ணி சிரிச்சுட்டு இருக்காங்க என்று கூறுகிறார். ஆமா மனோஜ் அது உண்மைதானே நீ நிறைய படிச்சிருக்க ஆனா உன்னால ஒரு வேலைக்கு போக முடிஞ்சுதா என்று சத்தம் போட்டுவிட்டு பேக் போட்டுகிட்டு கிளம்புகிறாள். எங்க போற ரோகினி என்று மனோஜ் கேட்கும்போது எனக்குனு யாராவது இருக்க மாட்டாங்களா நான் எங்கேயோ போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அதோட இன்றைய எபிசோடு முடிந்தது.