lyca

LYCA வின் செண்டிமெண்ட்டால் Gamechanger ரிலீஸ் தள்ளி போகிறதா…?அதற்குள் ஷங்கர் எடுத்த திடீர் முடிவு…

By Meena on டிசம்பர் 26, 2024

Spread the love

ங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். இயக்குனர் மட்டுமல்லாமல் எஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார் ஷாங்கர். ஆரம்பத்தில் விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் ங்கர்.

   

1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர். தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானார் ஷாங்கர்.

   

2000 காலகட்டத்திற்கு பிறகு அந்நியன், எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 என பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளராக காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில், கல்லூரி, ஈரம் போன்ற திரைப்படங்களை தயாரித்திருக்கிறார் ஷங்கர்.

 

ங்கர் என்றாலே வெற்றிப்படங்களையாக்கக்கூடியவர் என்ற பெயருண்டு. ஆனால் சமீபத்தில் இவர் இயக்கிய இந்தியன்– 2 திரைப்படம் சரியாக பேசப்படவில்லை. அதற்கு அடுத்ததாக இந்தியன் 3 படத்தையும் Game changer படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். Game Changer திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது.

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்த திரைப்படத்தை ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்திருந்த நிலையில் தமிழ்நாட்டு டிஸ்ட்ரிபியூட்டர் ஆன LYCA நிறுவனம் இந்த திரைப்படத்தை ஜனவரி 14 பொங்கல் அன்று ரிலீஸ் செய்யலாம் என்று செண்டிமெண்டாக பேசி வருகிறார்கள். அதனால் தமிழ்நாட்டிலே எப்போது game changer படம் ரிலீஸ் என்ற தேதி முடிவாகவில்லை. ஆனால் இசை வெளியீட்டு விழா முடிந்ததற்கு பிறகு சங்கர் முழு மூச்சுடன் அனைத்து சேனல்களுக்கும் ப்ரோமோஷன்காக இன்டர்வியூ கொடுக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.