மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், ஐ.டி.ஐ (ITI) முடித்தவர்களுக்காக 210 பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. வெல்டர், பிட்டர், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பணிகள் முற்றிலும் நிரந்தரமானவை. 10-ஆம் வகுப்புடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ சான்றிதழ் மற்றும் 5 ஆண்டுக்கால பணி அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிப்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படுபவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் மாதம் 22,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 73,750 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியுள்ளவர்கள் 2026 ஜனவரி 23-ஆம் தேதிக்குள் https://cochinshipyard.in/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 700 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் ஏதுமில்லை.
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…
மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின்…
சிட்னியில் ஓடும் ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலும், அதற்கு அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்பும் தற்பொழுது…
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…