கூடும் பலம்..!. தவெகவில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள்… அடுத்தடுத்து விஜய்க்கு மகிழ்ச்சி…!!

By Soundarya on மார்கழி 7, 2025

Spread the love

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை  சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் திருச்சியில் தன்னோட  சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர்  நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவருடைய சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து TVK சார்பாக அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.

காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதில் கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையில் விஜய் கட்சியில் செங்கோட்டையன், அடுத்ததாக நாஞ்சில் சம்பத்  இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்ததாக மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து எழும்பூர் பகுதி செயலாளர் சீனிவாசன்  வெளியேறி 50க்கும் மேற்பட்டோருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதே போன்று தொடர்ந்து தவெகவில் பல்வேறு கட்சியினர் இணைவதால் TVK கட்சியின் பலம் அதிகரித்துவருகிறது.