பீகாரை தொடர்ந்து தமிழகம், மேற்குவங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளானது நடந்து வருகிறது. இந்த நிலையில் எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல்களை வழங்கியதற்காக உத்தர பிரதேச காவல்துறை நூர்ஜஹான் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. ராம்பூரில் வசிக்கும் நூர்ஜஹான் அவருடைய இரண்டு மகன்கள் ஆமீர்கான், டேனிஸ்கான் நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். ஆனால் எஸ்ஐஆர் படிவத்தில் நூர்ஜஹான் தன்னுடைய மகன்கள் ராம்பூரில் வசிப்பதாக குறிப்பிட்டு போலி கையப்பத்துடன் கூடிய ஆவணத்தை சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யும்போது நூர்ஜஹான் அளித்த தகவல் தவறானது என்று அதிகாரிகள் கண்டறிந்தார்கள். அவர் தன்னுடைய மகன்களின் கையொப்பங்களை போலியாக இட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து SIR மேற்பார்வையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நூர்ஜகான் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்கள். இதன் மூலம் தவறான தகவல்களை கொடுத்ததற்காக நாட்டிலேயே முதல் முறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
