சமீபத்தில் நடந்த ரெட் ஸீ திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 1994ம் ஆண்டு நான் அழகி போட்டியில் தற்செயலாக தான் பங்கேற்றேன். அதை வெறும் அழகி போட்டியாக மட்டும் நான் கருதவில்லை. சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவம் படுத்தும் வாய்ப்பாகவும் கருதினேன். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன்.
அதே ஆண்டு பாலிவுட்டில் இருந்தும் வாய்ப்புகள் வந்தன. தேவதாஸ் படம் என் வாழ்க்கையில் ஒரு மைல்கல் போன்றது. அந்த படத்திற்கு பிறகு கதைகளை தேர்ந்தெடுப்பதில் எனக்கு முழுமையான தெளிவு கிடைத்தது என்று அந்த விழாவில் நடிகையை ஐஸ்வர்யா ராய் பேசியிருக்கிறார். தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
