உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் வெளியிட்டு விடுவேன் என்று இளைஞர்கள் மிரட்டையுள்ளனர். அதேபோல வீடியோவை ஆன்லைனில் வெளியிடாமல் இருப்பதற்கு ஐந்து லட்சம் ரூபாய் தரும்படி சிறுமியின் குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயதான வைபவ், 21 வயதான விஷால் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
