வீரம் படம் ஷூட்டிங் நடந்தப்போ அஜீத் செய்த சம்பவம் – நடந்ததை அப்படியே சொன்ன நடிகர் விதார்த்!

By Elango on மார்கழி 7, 2025

Spread the love

மைனா படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை பெற்றவர் விதார்த். தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வருகிறார். நல்ல நேர்த்தியான நடிகர் என்ற பெயர் இவருக்கு உண்டு. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் என்ற படத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்திருந்தார். அதில் அஜீத்குமாரின் 4 சகோதரர்களில் ஒருவராக நடிகர் விதார்த்தும் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் விதார்த் கூறியதாவது, வீரம் படத்தில் மட்டுமல்ல, நிஜத்துலேயும் அஜீத் குமார் என்னை அவர் தம்பி மாதிரிதான் பார்த்துகிட்டார். ஒரு பாடலுக்காக அஜீத்குமார் தமன்னா எல்லாம் சுவிட்சர்லாந்து போனாங்க. அப்போ என்கிட்ட அஜீத் சார், நீ ஸ்விட்சர்லாந்து போய் இருக்கியா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். உடனே அவர் என்னை விசா போட்டு அங்கே கூட்டிட்டு போயிட்டார். அந்த அளவுக்கு அவர் என் மீது அன்பு காட்டினார் என்று நடிகர் விதார்த் கூறியிருக்கிறார்.