டீ குடிக்க போனது ஒரு குத்தமா…? 9 பெண்கள் சேர்ந்து செஞ்ச வேலை…. திருப்பூரில் பிடிபட்ட பலே திருட்டு கும்பல்…!

By Devi Ramu on மார்கழி 23, 2025

Spread the love

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள பாத்திரப் பட்டறைகள் மற்றும் தொழிற்சாலைகளைக் குறிவைத்து ஒரு பெண்கள் கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. தண்ணீர் கேட்பது போலவோ அல்லது ஆட்கள் இல்லாத நேரத்திலோ மிகவும் துணிச்சலாக உள்ளே நுழையும் இந்த பெண்கள், அங்கிருக்கும் விலை உயர்ந்த பொருட்களை நொடிப் பொழுதில் திருடிச் செல்கின்றனர்.

இந்தத் திருட்டுச் சம்பவங்கள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இது குறித்து பாத்திரப் பட்டறை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதுடன், தங்கள் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

மற்றொரு சம்பவத்தில், திருப்பூரின் அப்பச்சி நகரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் 45 கிலோ தாமிர கம்பிகளைத் திருடிய 9 பெண்கள் அடங்கிய கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடையின் உரிமையாளர் டீ குடிக்கச் சென்ற சில நிமிட இடைவெளியில், இந்த பெண்கள் திட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

   

பிடிபட்ட பெண்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடர் திருட்டுச் சம்பவங்களால் திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்; சந்தேகத்திற்கு இடமான முறையில் கும்பலாக வரும் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.