சொந்தக் குடும்பத்தையே கவனிக்காத உங்கள் தலைவரு.. நாட்டு மக்களை எப்படி கவனிப்பாரு.. தவெக வேட்பாளரை கிழித்தெடுத்த பெண்கள்..!!

Spread the love

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சுகுமார், கண்ணம்பாளையம் வாரச் சந்தையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துத் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு காய்கறி விற்பனை செய்துகொண்டிருந்த இரு பெண்கள், வேட்பாளரை வழிமறித்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். “சொந்தக் குடும்பத்தையே கவனிக்காத உங்கள் தலைவர், நாட்டு மக்களை எப்படி கவனிப்பார்?” என அவர்கள் கேட்ட கேள்வியால் வேட்பாளர் நிலைகுலைந்து போனார்.

தொடர்ந்து பேசிய அந்தப் பெண்கள், தனது ரத்த உறவுகளையே மதிக்காத விஜய், தமிழ்நாட்டு மக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு அரணாக இருப்பார் என்று கேள்வி எழுப்பினர். மேலும், முதலமைச்சரையும், சிறு பிள்ளைகளையும் தவெக நிர்வாகிகள் மிகக் கேவலமாக அவதூறு பேசி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், “இப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேசுவதை உங்கள் தலைவர் ஏன் தடுக்கவில்லை?” என்று கிடுக்கிப்பிடி கேள்விகளை அடுக்கினர்.

பெண் வியாபாரிகளின் அடுத்தடுத்த அதிரடி கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் வேட்பாளர் சுகுமார் பெரும் திணறலுக்கு உள்ளானார். அவர்களைச் சமாதானப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. தொடர்ந்து கேள்விக்கணைகளால் துளைக்கப்பட்டதால், பிரச்சாரத்தை முழுமையாக முடிக்க முடியாமல் அவர் பாதியிலேயே அங்கிருந்து கிளம்பிச் சென்றார். வேட்பாளர் சென்ற பின்னரும் சந்தை பகுதியில் விஜய்யின் அரசியல் அணுகுமுறை குறித்த விவாதங்களே மேலோங்கி இருந்தன.

Soundarya

Recent Posts

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

22 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

41 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

1 மணத்தியாலம் ago