“நான் எத்தனை பொண்ணு கூட வேணாலும் பழகுவேன் உனக்கு என்னடி”… கள்ளத்தொடர்பில் இருந்த கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!

By Nanthini on தை 4, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாகையடி கோட்டார் வடக்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 25 வயது உடைய சந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் செந்தில்குமார் மற்றும் சந்தியா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே செந்தில்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதால் அடிக்கடி வெளியூர் சென்று ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனை அறிந்த சந்தியா கணவரிடம் அவருடைய கள்ளக்காதல் குறித்து கேட்டபோது அடிக்கடி வாக்குவாதம் வந்துள்ளது. இதனால் செந்தில்குமாரின் உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வாழவைத்துள்ளனர். இருந்தாலும் செந்தில்குமார் மற்றொரு பெண்ணுடன் ஆன உறவை கைவிடாமல் இருந்துள்ளார்.

   

எனவே மீண்டும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்த போது செந்தில்குமார், நான் எத்தனை பொண்ணு கூட வேணாலும் பழகுவேன் அதை நீ கேட்கக் கூடாது என்று சந்தியாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சந்தியாவின் கணவர் செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.