திருவள்ளூர் மாவட்டம் போரூர் தெல்லியார் அரகம் பகுதியை சேர்ந்த ஷில்பா(35) என்ற திருநங்கை போரூர் பகுதியில் தங்கி பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். வழக்கம்போல நேற்று இரவு பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் நின்று பாலியல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரிடம் வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் அவருடன் தனிமையில் இருக்க பணம் கொடுத்து அருகில் உள்ள குடோனுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு காலையில் அந்த குடோனில் சில்பா மட்டும் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார்.
இதனைப் பார்த்து அந்த குடோனில் காவலாளி போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் அந்த வட மாநிலத்தவரை கைது செய்த விசாரித்ததில் அவருடைய பெயர் துர்ஜான் (22) என்பதும் இவர் லோடுமேன் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவு சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கை உடன் தனிமையில் இருக்க அவருக்கு பணம் கொடுத்து அருகில் இருந்த குடோனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ஷில்பா வாலிபர் பாக்கெட்டில் இருந்த 2500 ரூபாயை வலுக்கட்டாயமாக பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அருகில் இருந்த கட்டையை எடுத்து ஷில்பாவின் தலையில் தாக்கி அவரை கொலை செய்துள்ளார். பாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை பணம் பறித்ததால் வடமாநிலத்தவரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
