பொங்கல் பரிசு ரூ.3000 எப்போது கிடைக்கும்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on தை 4, 2026

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொங்கல் பரிசாக 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார் .

இதனிடையே பொங்கல் பரிசாக ரூ.3000-ஐ முதல்வர் அறிவித்த நிலையில், அதற்கான டோக்கன் கொடுக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் டோக்கன்களில் ஜன.8-ம் தேதி காலை 9 மணி முதல் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்க ஏதுவாக, 7 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் டோக்கன்களை வழங்கி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.