மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த புதிய யுக்தி… பெண்கள் முன்னேற்றதிற்காக விரைவு நடவடிக்கை…

Spread the love

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கிராமப்புற பெண்களை முன்னேற்றுவதற்காக சுய உதவி குழுக்கள் இருக்கின்றது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இயங்கி வரும் மாநில அரசு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் தமிழக முழுவதும் 4.73 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

சுய உதவி குழுக்களின் கீழ் எங்கள் பலவித பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். கிராமப்புறங்களில் இந்த மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் நகர்ப்புற மக்களை சென்றடையும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இந்த வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை அல்லது மூன்று முறை விடுமுறை நாட்களில் மதி இயற்கை சந்தை சிறப்பு விற்பனை போன்றவை தமிழக ஆண்டு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு விற்பனையை விரிவுபடுத்தி வருகின்றனர்.

இப்போது அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை அமேசான் flipkart போன்ற பிரபல ஆன்லைன் இ வர்த்தக தளத்தில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார். இது மட்டுமில்லாமல் ஏற்கனவே மதி அனுபவ அங்காடி மதி சிறு தானிய உணவுகள் மதி சந்தை விற்பனை மதி நடமாடும் விற்பனை வாகனம் போன்றவற்றை ஏற்படுத்தி இருக்கிறார் துணை முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

அதன் தொடர்ச்சியாக இணையவழியில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை நான்கு மண்டலங்களாக பிரித்து சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை ஆகிய பகுதிகளில் வர்த்தக சேவை முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் கலந்து கொண்ட அமேசான் பிளிப்கார்ட் மீசோ ஜெம் இந்தியா மார்ட் போன்ற முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளை பதிவேற்றம் செய்ய உதவினார்கள். இதன்மூலம் 2671 பொருட்கள் ஆன்லைன் இ வர்த்தக ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. வர்த்தக தளங்களின் வழியாக இதுவரை 24 லட்சம் பொருட்கள் விற்பனையாகி இருக்கிறது. இனி இந்த மகளிர் சுய உதவி குழுக்களை அதில் இருக்கும் பெண்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல பல முன்னெடுப்பு நடவடிக்கை அரசு சார்பாக திட்டமிடப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

விஜய் – அன்புமணி ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?…. தவெக அமைச்சரவையில் பாமக…. கொதித்தெழும் திருமா…. அதிரும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பெற பாமக முனைப்பு காட்டுவதாகவும், அதற்காக பாமகவுக்கு இரு அமைச்சர் பதவிகளை…

2 minutes ago

திக் திக் திக்… நடுரோட்டில் நில வியாபாரி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு… பீகாரில் நடந்த கொடூரம்… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!

பீகார் மாநிலம் ஆரா பகுதியில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ராஜு யாதவ் என்ற நில வியாபாரியை, மோட்டார் சைக்கிளில் வந்த…

4 minutes ago

ஐயோ ஐயோ… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்… குழந்தையைக் கையில் வைத்திருந்த தந்தை மீது பாய்ந்த காளை… பதற வைக்கும் CCTV காட்சி…!!

ராய்ப்பூர் டீடீ நகர் பகுதியில் வீட்டின் வெளியே தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர் மீது, அப்பகுதியில்…

25 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… சாட்சியமளிக்க வந்த பெண்… நீதிமன்ற முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

டெஹ்ராடூனின் விஜய் காலனியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண், புதன்கிழமை அன்று நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்த…

35 minutes ago

அட கொடுமையே… வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரம்… சலூன் உரிமையாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…

55 minutes ago