10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு… 10,000 உதவி தொகை தரும் இத்தேர்வின் முழு விவரங்கள் இதோ…

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இந்த திறனாய்வு தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த வருடம் இந்த திறனாய்வு தேர்வு எப்போது நடைபெறுகிறது எப்போது விண்ணப்பிக்கலாம் என்பதைப் பற்றிய முழு விவரத்தை இனிக் காண்போம்.

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வருகிற ஜனவரி 25, 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2024 -2025ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு ரூபாய் பத்தாயிரம் என்ற கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தமிழக அரசு பாடத்திட்டத்தின் படி 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பாடங்களின் அடிப்படையில் தேர்வு இருத்தாள்களாக நடத்தப்படும்.

முதல் தேர்வு தாளில் கணிதம் தொடர்பான 60 வினாக்கள் இருக்கும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்பான 60 வினாக்கள் இருக்கும். முதல் தாள் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை இரண்டாம் தாள் மதியம் 2 மணி முதல் 4:00 மணி வரையிலும் நடைபெறும்.

இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn. gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை 30. 11. 2024 முதல் 9 12.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூபாய் 50 தேர்வு கட்டணமாக சேர்த்து மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 9.12.2024 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று இந்த தேர்வு தொடர்பான அறிக்கையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

admin

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

8 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

8 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

8 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

9 மணத்தியாலங்கள் ago