லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்கள்… 50 துண்டுகளாக வெட்டப்படுவார்கள்… உத்தரபிரதேச ஆளுநர் பகீர் கருத்து..!!

By Soundarya on ஐப்பசி 10, 2025

Spread the love

உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் இளம் பெண்கள் லிவ்-இன் உறவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 47வது பட்டமளிப்பு விழாவில் , பட்டம் பெறும் மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் தங்கப் பதக்கங்களை வழங்கும் விழாவில் உரையாற்றும் போது,  மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒழுக்கம், கடமை மற்றும் தேசபக்தி உணர்வை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 

மேலும் லிவ்-இன்  ரிலேசன்ஷிப் தற்போது டிரெண்ட்டாக இருப்பதாக கூறிய அவர், லிவ்-இன்   ரிலேசன்ஷிப்பினால் இப்போதுள்ள இளம்பெண்கள் 15-20 வயதில் குழந்தை பெறுவதாகவும், இதை பார்க்கும்போது வேதனையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் லிவ்-இன் உறவில் இருந்து பெண்கள் விலகியிருக்க வேண்டும், இல்லையென்றால் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு கொல்லப்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.