மேற்கு மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களை சேர்ந்த 39 தொகுதிகளின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது பதவி வகித்து வருகின்றார். இதன் காரணமாக தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றார். செந்தில் பாலாஜியும் திமுக தலைமையின் கனவை நிறைவேற்றும் விதமாக கரூரை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். தற்போது அவருக்கு ஒரு புதிய அசைன்மென்ட் கொடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதாவது கோவை மாவட்டத்தில் அதிமுக வசம் உள்ள 10 தொகுதிகளை மீட்பதற்கும் எஸ் பி வேலுமணி போன்ற அதிமுக முக்கிய தலையை ஜெயிக்கவும் செந்தில் பாலாஜியை கோவையில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. 2001, 2011 மற்றும் 2021 தேர்தல்களில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. திமுக சார்பாக கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சக்கரபாணியும் தன்னுடைய வேலையை சரியாக செய்யாததால் கரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பிறகு அனைத்து தேர்தல்களிலும் திமுகவுக்கு பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது செந்தில் பாலாஜி தான். அதனால் தற்போது ஒட்டுமொத்த மேற்கு மண்டல வெற்றிக்கான முழு பொறுப்பையும் அவர் கையில் ஒப்படைத்து விட்டது திமுக. தற்போது மீண்டும் கோவையை திமுக வசம் கொண்டுவர எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று முழு சுதந்திரம் கொடுத்து செந்தில் பாலாஜியை திமுக களம் இறக்கி விட்டது. இதனைத் தொடர்ந்து கோஷ்டி மோதல்களை களை எடுப்பது , கட்சியில் உள்ளடி வேலை பார்ப்பவர்களை நீக்குவது என தீவிர வேலைகளை செந்தில் பாலாஜி செய்து வருகிறார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தேவையான வியூகங்களை செந்தில் பாலாஜி வகுத்து வருகிறாராம். செந்தில் பாலாஜி கட்டளையிட்டால் எதையும் செய்வோம் என்று மாநகராட்சி கவுன்சிலர்களில் தொடங்கி எம்பி வரை அனைவருமே தற்போது அவரின் கண் அசைவுக்காக காத்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் அவரை கோவையில் களம் இறக்கினால் ஒட்டுமொத்த உடன்பிறப்புகளும் குஷியாகி விடுவார்கள் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இந்தச் செய்தி இபிஎஸ்க்கு பெயர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
