தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதற்கு கூட்டணிக்குள் புதிய கட்சிகளை. சேர்ப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டம் அவர் ஏற்கவில்லை இதற்கு இடையே கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தனித்துப் போட்டி என்ற முடிவை விஜய் மறுசீலனை செய்கிறார் . இதனை பயன்படுத்திக்கொண்ட பாஜக, “தனித்து போட்டியிட்டால் திமுகவை எதிர் கொள்ள முடியாது. விஜய்க்கு கூட்டம் வரும். அதனால் பலன் இருக்காது.
திமுகவை தனித்து எதிர்கொள்வது தமிழக வெற்றிக்கழகத்தால் இயலாத காரியம் “என்று விஜயின் உறவினர்களிடமும், நெருக்கமானவர்களிடமும் பாஜக மேலிட நிர்வாகிகள் அறிவுரை கூறி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
