பொள்ளாச்சியே நடுங்கிப்போச்சு..! பட்டப்பகலில் நடுரோட்டில் மனைவி குத்திக்கொலை… நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்..!!

By Soundarya on ஐப்பசி 10, 2025

Spread the love

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் மனைவியை நடுரோட்டில் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஸ்வேதா என்பவருக்கும், பாரதி என்பவருக்கும் திருமணமான நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாரதி தன்னுடைய மனைவியின் மீது அடிக்கடி சந்தேகப்பட்டதால் ஸ்வேதா அவரை பிரிந்து சென்று வேறு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஸ்வேதா வேலைக்கு சென்றபோது அவரை வழி மறித்த பாரதி குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு ஸ்வேதா மறுத்ததால் வாக்குவாதம் முற்றி பாரதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொலை செய்து சாக்கடை கால்வாயில் தள்ளி விட்டுள்ளார். இதனை அடுத்து பொதுமக்கள் பிடித்து பாரதியை போலீசில் ஒப்படைத்த நிலையில் அவரை கைது செய்துள்ளார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.