திருமணமான அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு ஆசை தீர்க்க சுமங்கலிகளாக இருக்க வேண்டும் தாங்கள் உயிரோடு இருக்கும் வரை சுமங்கலியாக இருக்கும் வரம் வேண்டும் என்று தான் கடவுளிடம் வேண்டுவார்கள். தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்கும் போது அந்த வரம் நமக்கு கிடைக்கும்.
தீர்க்க சுமங்கலியாக கணவர் குழந்தை என சந்தோஷமான வாழ்க்கை வாழ விரும்பும் பெண்கள் அம்பிகையை வழிபட வேண்டும். மாதம் தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு உங்கள் கைகளால் குங்குமம் வாங்கி அர்ச்சனை செய்ய சொல்லி அந்த குங்குமத்தை வாங்கி வைத்து அதை பயன்படுத்த வேண்டும். இதனால் அந்த அம்பாள் உங்களுக்கு தீர்க்க சுமங்கலியாக இருக்க அருள் ஆசி புரிவாள்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே மாதம்தோறும் வரும் பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் குங்குமத்தை எடுத்து விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து ஓம் சக்தி என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி ஒரு டப்பாவில் குங்குமத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மந்திரித்த குங்குமத்தை தினமும் உபயோகித்து வரும்பொழுது உங்களுக்கு தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும்.
இது தவிர நம் வீட்டிற்கு ஏதேனும் பெண்கள் வந்து செல்லும்போது வெறுங்கையோடு அந்த பெண்களை அனுப்பாமல் குங்குமம் முடிந்தால் சிறிது பூ கண்ணாடி வளையல் ஆகியவற்றை கொடுத்து அனுப்பும்போது அந்த சுமங்கலிகள் மனம் குளிர்கிற போது நீங்கள் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தை பெறுவீர்கள். இது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் போது பெண்கள் குங்குமத்தோடு இருக்க வேண்டும் கையில் வளையல்கள் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் அது கண்ணாடி வளையல்களாக இருந்தால் மிகவும் சிறப்பு. இதுபோல ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்கும் போது நீங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கக்கூடிய வரம் உங்களுக்கு கிடைக்கும்.