தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் பாகுபலி ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் கொடுத்து வெளியான திரைப்படம் தான் கங்குவா. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தராமல் தோல்வியை தழுவியது. இந்த திரைப்படம் சுமார் 2000 கோடி வரை வசூலிக்கும் என்று சூர்யா பேசி இருந்தார். இந்திய சினிமாவே வியந்து பார்க்கக் கூடிய ஒரு படமாக கங்குவா இருக்கும் என்றும் கொஞ்சம் ஓவராக பேசியிருந்தார்.
இறுதியாக இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் படத்திற்கு ஆதரவாக பலர் போர்க்கொடி தூக்கினர். சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 100 கோடி மட்டுமே வசூலித்து மோசமான சாதனை பட்டியலில் இடம் பெற்றது. கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிக்காக போராடிவரும் சூர்யா அடுத்து பெரியதாக நம்பி இருக்கும் திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 திரைப்படம் தான்.
இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூரிய 45 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சூரியா 45 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சூர்யா மற்றும் திரிஷா இருவரும் இணைந்து ஆறு படத்தில் நடித்திருந்த நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூரியன் 45 படத்தில் திரிஷா இணைந்துள்ளார். இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கின்றார். இந்த நிலையில் சூர்யா 45 திரைப்படத்தில் லப்பர் பந்து திரைப்படம் மூலம் பிரபலமான மலையாள நடிகை சுவாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.
‘Lubber Pandhu’ Swasika onboard #Suriya45💥 pic.twitter.com/lmhc1ThCN3
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 29, 2024