மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக்கோரி உள்ளூர் பெண்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மதுபானக் கடை காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை நிலவுவதாகவும், சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறி அவர்கள் நீண்ட நாட்களாக நடவடிக்கை எடுக்கக் கோரி வந்தனர்.
எனினும், காவல்துறையோ அல்லது கலால் துறை அதிகாரிகளோ இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள், அதிகாரிகளுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
கோபமடைந்த பெண்கள் காவல்துறையினர் மற்றும் கலால் துறை அதிகாரிகள் மீது கற்கள் மற்றும் கம்புகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
