அய்யய்யோ… ஆத்துல கார் முங்குதுடா… உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு… அலறிய இளைஞர்கள்… நொடியில் தப்பிய பேராபத்து… காஷ்மீரில் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 13, 2026

Spread the love

ஜம்மு-காஷ்மீரின் சோனமார்க் அருகே உள்ள சிந்து ஆற்றுப் பகுதியில், இளைஞர்கள் குழு ஒன்று தங்களது மஹிந்திரா ஸ்கார்பியோ காரை ஆற்றின் நீர ஓட்டத்திற்குள் செலுத்தி வீடியோ பதிவு செய்ய முயன்றுள்ளனர். அப்போது, மலையோர ஆற்றின் அதிவேக நீர்ரோட்டத்தில் கார் எதிர்பாராதவிதமாகச் சிக்கி நகர முடியாமல் நடுவழியில் முடங்கியது. காரின் உள்ளே இருந்த இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்படும் அபாய கட்டத்தை எட்டினர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும் உள்ளூர் பொதுமக்களும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அனைவரின் கூட்டு முயற்சியால், காரில் சிக்கியிருந்த இளைஞர்கள் அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு ஆற்றங்கரைக்குக் கொண்டுவரப்பட்டனர். பின்னர், நீரில் சிக்கியிருந்த காரும் மீட்கப்பட்டது.

   

இச்சம்பவத்தில் காரை ஓட்டியவர் ஸ்ரீநகரைச் சேர்ந்த முகமது இபாத் பட் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சமூக வலைதளங்களில் லைக் மற்றும் வியூஸ்களுக்காக உயிரைப் பணயம் வைத்து, ஆபத்தான மலைப்பகுதி ஆறுகளில் இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.