உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் காரை பின்னோக்கி இயக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த பெண் கீழே விழுந்து அவரது கால்கள் மீது கார் சக்கரம் ஏறியது. இதனால் இரண்டு கால்களும் முறிந்த நிலையில் அந்த பெண் வலியில் துடித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவனக்குறைவாக ரிவர்ஸ் எடுத்ததால் பெண் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
