குஜராத் மாநிலம் திரு சோமநாத் மாவட்டத்தில் உள்ள ஊனா கிராமத்தைச் சேர்ந்தவர் சவ்ஜித் படேல். இவர் ஹோட்டல் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே தந்தைக்கு அவருடைய சொந்த கிராமத்தில் ஒரு வீடு இருந்தது. வயதான காலத்தில் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்ற சவ்ஜித் தன்னுடைய கடைசி நாட்களை அங்கேயே கழித்தார். சமீபத்தில் அவர் இறந்து விட்டார். இறப்பதற்கு முன்பாக தன்னுடைய பேரன் தன்னுடைய சொத்துக்கு வாரிசாக இருப்பார் என்று உயில் எழுதி வைத்து இருந்தார்.
இந்த நிலையில் சவ்ஜித்தின் பேரன் சமீபத்தில் தாத்தாவின் கிராமத்திற்கு சென்றுள்ளார். தன்னுடைய தாத்தாவில் வீட்டிற்கு சென்று வீட்டை சுத்தம் செய்த போது குப்பை தொட்டியில் பங்கு சான்றிதழ்கள் கிடைத்துள்ளது. அதை ஆன்லைனில் சரி பார்த்தபோது அதன் மதிப்பு மட்டும் 2.5 கோடி என்று தெரிய வந்ததால் சந்தோசத்தில் துள்ளிக் குதித்துள்ளார். இதனை அறிந்த இளைஞரின் தந்தையும் தன்னுடைய தந்தையின் பங்கில் தனக்கு தான் உரிமை உண்டு என்று கூறினார். தன்னுடைய தாத்தா முழு சொத்தையும் தனக்கு உயில் எழுதி கொடுத்ததால் இந்த பங்குகள் தன்னுடையது என்று பேரன் வாதிட்டார்.தற்போது பங்குகளில் உரிமைக்காக தந்தை மற்றும் மகன் இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.
