ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவர் தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இவர் யூடியூப் சேனல் தொடங்கியதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. இந்த நிலையில் ஹர்சனா கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு யூட்யூபரான சந்திப் என்பவருடன் புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் புஷ்பா தனது கணவரை விட்டு பிரிந்து சந்தீப்புடன் ஒன்றாக வாழ்ந்தார். இருவரும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தனர்.
கடந்த 5- ஆம் தேதி புஷ்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தீப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புஷ்பாவின் உடலை பார்த்து சந்தீப் கதறி அழுதார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று புஷ்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு புஷ்பா கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து சந்தீப்பை பிடித்து விசாரித்த போது, முதலில் புஷ்பாவை இழந்து தவிப்பது போல நாடகமாடிய சந்தீப் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார். கணவரை விட்டு பிரிந்த புஷ்பா திருமணம் செய்து கொள்ளுமாறு சந்திப்பை வற்புறுத்தியுள்ளார். ஆனால் புஷ்பாவை திருமணம் செய்து கொள்ள சந்தீப்பிற்கு விருப்பம் இல்லை. சம்பவம் நடந்த அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் சந்தீப் புஷ்பாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
