ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அப்துல் ரசல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி காதலுக்கு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் இளம்பெண் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அப்துல் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். முதலில் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியை தந்து விட்டு தற்போது விலகி செல்லும் அப்துல் மீது இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் “நானும் அப்துலும் காதலித்தோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி என்னை பெங்களூருக்கு வர சொன்னார். அங்கு ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்று திருமண ஆசை காட்டி அப்துல் கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்தார். அடிக்கடி என்னை ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்தார். தற்போது வேறு சில பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை பற்றி நான் கேட்ட போது என்னுடன் தகராறு செய்து திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார்.
மதம் மாறினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறுகிறார். தற்போது அவர் மதத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. என்னை ஏமாற்றிய அப்துல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட இளம்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
