ரிதன்யா மரண ஓலம் அடங்குவதற்குள் மற்றொரு இளம்பெண் தற்கொலை.. தமிழகத்தை விடாமல் துரத்தும் சோகம்…!

By Nanthini on ஆடி 14, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் தேவராஜ் மற்றும் கற்பகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள்தான் குமுதா (27). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்போது உடன் வேலை செய்த பெங்களூரை சேர்ந்த அஜித்குமார் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

குமுதா தன் கணவர் அஜித்குமாருடன் காட்டுப்பாக்கம் விஜயலட்சுமி நகர் பகுதியில் தனிக்குடித்தனமாக வசித்து வந்த நிலையில் சம்பவத்தன்று வேலை விஷயமாக அஜித்குமார் பெங்களூர் சென்ற நிலையில் வீட்டில் குமுதா குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். அவரது செல்போனில் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறி அழுது புலம்பியுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் உடனடியாக குமுதா வீட்டுக்கு விரைந்து சென்ற நிலையில் அங்கு கண்ட காட்சிகள் அவர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது. குமுதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் அவரது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை அழுதபடி கிடந்துள்ளது.

   

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குமுதா உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திருப்பூரில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.