இன்ஸ்டாகிராமில் காதலன் போல இனிக்க இனிக்க பேசி தன் தோழியையே ஏமாற்றிய மாணவி.. அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்..

By Nanthini on ஆடி 14, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கு மனைவியும் 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல தயாராகி வரும் நிலையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தன் மகளை அழைத்து விசாரித்த பஎனக்கும், நான் பிளஸ் டூ படிக்கும் போது எனக்கும் சக பள்ளி தோழிக்கும் instagram மூலமாக ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் என்னை காதலிப்பதாக கூறினார். ஆனால் எனக்கு அந்த வாலிபரின் முகம் தெரியாது. அவருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கவும் தாயாரின் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்த நிலையில் நான் பணம் இல்லை என்று கூறியதும் எனது நகைகளை தோல்வியிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டார்.

இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எனது தோழி மூலம் அவருக்கு கொடுத்து அனுப்பினேன் என்று கூறினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியின் பள்ளி தோழியை அழைத்து விசாரித்த போது முன்னுக்கு முரணாக பதில் அளித்துள்ளார். இப்படியான நிலையில் தோழியின் தந்தை தனது மகளின் பீரோவில் 8 வளையல், 2 தங்கச் சங்கிலி என 15 பவுன் நகைகள் இருப்பதாக போலீசிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த நகைகள் மாணவியின் மாயமான நகைகள் என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தோழியிடம் விசாரித்த போது தான் திட்டமிட்டு மாணவியை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார் .

   

இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி காதலன் போல பேசி மாணவியிடம் நாடகமாடியதும் அவரே தான். பிறகு காதலனுக்கு கொடுக்க வேண்டும் எனக் கூறி நகைகளை அபகரித்ததும் தோழிதான். இதற்கு அவருடைய தாயார் வகுத்த திட்டமே மூல காரணம் என மற்றொரு பகிர் தகவலும் வெளியாகி உள்ளது. தோழியின் தந்தை கூலி வேலை செய்துவரும் நிலையில் தாய் சுய உதவி குழுக்களிலும் வங்கியிலும் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்துவதற்கு திட்டமிட்டு தனது மகளின் தோழியான மாணவி நல்ல வசதியுடன் இருப்பதை அறிந்து அவரிடம் நகைகளை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். தாயாரின் ஆலோசனைப்படி தோழி ஒரு ஆண் பெயரில் போல் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி காதலன் போல இனிக்க இனிக்க பேசி பழகி நம்பி நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.