பகீர்… இரவில் பணிமுடிந்து வீடு திரும்பிய… பெண்ணை வழிமறித்து பாலியல் அத்துமீறல்… தப்பிய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…!

By Swetha on ஆவணி 2, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த 25 வயது பெண், கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், கீழக்கல்லாம்பாறையைச் சேர்ந்த இமான் என்ற வைகுண்டம் (28) என்பவர், கடந்த எட்டு மாதங்களாக அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தித் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண் தனது இரவு நேரப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வைகுண்டம், பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகத் திடீரென அவரது கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த எதிர்பாராத சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக அங்கிருந்து தப்பித்துள்ளார்.

   

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள வைகுண்டத்தைக் கைது செய்ய தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.