ஷாக்… யார் உண்மையான எட்டப்பன்?… ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு… தயாநிதி மாறன் அடித்த மாஸ் பதிலடி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 2, 2026

Spread the love

தமிழகத்திற்கு வருகை தந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவை மறைமுகமாக ‘எட்டப்பர்கள்’ என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக எம்பி தயாநிதி மாறன் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் “யார் உண்மையான துரோகி?” என்று கேள்வி எழுப்பி காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

தனது பதிவில் தயாநிதி மாறன் பல முக்கிய விவகாரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்திற்கு வந்து காவிரி உரிமை குறித்தோ அல்லது மேகதாட்டு அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்போ தெரிவிக்காமல் இருப்பது தமிழகத்திற்குச் செய்யும் துரோகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தாமல், அதில் நடைபெறும் முறைகேடுகளை மட்டும் பேசுவதும், போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்காமல் இருப்பதும் துரோகத்தின் உச்சம் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

   

பாஜகவின் குதிரைப் பேரத்தைக் கண்டிப்பவர்கள், தவெக-வின் செயல்பாடுகளையும் பாசிசப் போக்கையும் கண்டுகொள்ளாமல் இரட்டை நிலைப்பாடு வகிப்பது துரோகத்தின் தொடர்ச்சி என்றும் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கு வந்து அரசியல் பாடம் எடுத்த நபருக்கே இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொருந்தும் என்று கூறி, ராகுல் காந்தியின் விமர்சனத்திற்குத் தனது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.