BREAKING: காவிரியில் கூடுதல் நீர் திறப்பு…. இரவில் வந்த மகிழ்ச்சி செய்தி…!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணை தனது முழு கொள்ளளவான 65 அடியை எட்டியதைத் தொடர்ந்து, அங்கிருந்து விநாடிக்கு 25,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முன்னதாக காலையில் விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 12,000 கனஅடி நீர் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

நேற்று மாலையில் திறந்து விடப்பட்ட நீர் இன்று இரவுக்குள் தமிழக எல்லையான ஒகேனக்கல்லை வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எல்லைப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து தமிழக விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.