மத்திய அரசு ‘வேட்பாளார்களின் ஊக்கத்தொகை திட்டம்’ மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ2,500 உதவித்தொகை வழங்குவதாக சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் செய்தி முற்றிலும் போலி என மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகமான PIB Fact Check அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இதுபோன்று எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு தொடங்கவில்லை என்றும், அரசாங்கத்தின் பெயரில் இயங்கும் போலி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இத்தகைய கவர்ச்சிகரமான போலி தகவல்களை நம்பி உங்களின் வங்கித் கணக்கு விவரங்கள், OTP, ஆதார் எண் உள்ளிட்ட தனிப்பட்டத் தகவல்களை எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு தெரியாத இணையதளத்திலும் அல்லது நபர்களிடமும் பகிர வேண்டாம் என PIB வலியுறுத்தியுள்ளது. எனவே, நிதி இழப்புகளையும் ஏமாற்றங்களையும் தவிர்க்க இந்த உண்மையை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனடியாகப் பகிர்வது (SHARE IT) மிக அவசியமாகும்.
