“அந்த பேயை நான் விரட்டுறேன்…” பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து… பட்டப்பகலில் உறவினர்கள் கண்முன்னே நடந்த அராஜகம்…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 23, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா பகுதியில், பேயோட்டுவதாகக் கூறி பெண் ஒருவரைத் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அறைந்து, கழுத்தில் திரிசூலத்தை வைத்து அச்சுறுத்திய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மூடநம்பிக்கையின் பிடியில் சிக்கிய குடும்பத்தினர், தங்கள் வீட்டுப் பெண் இத்தகைய சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்ததுடன், அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி வரும் நிலையில், பேயோட்டுதல் என்ற பெயரில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய கொடூர வன்முறைகளுக்கு எதிராகவும், இதில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.