அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 17, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம் ஆகிய இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஆனால், சில காரணங்களால் யாருடைய காதல் திருமணம் வரை கைகூடவில்லை. இதன் காரணமாக, பெற்றோர் பார்த்து நிச்சயித்த ஜிதேந்திரா என்பவருடன் அஞ்சலுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஒரே ஒரு முறை மட்டுமே கணவர் வீட்டிற்குச் சென்ற அஞ்சல், அதன்பின் தனது பெற்றோர் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.

இந்நிலையில், அஞ்சலின் முன்னாள் காதலனான வினய் கௌதம், அவர்கள் இருவரும் கடந்த காலத்தில் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அஞ்சலின் கணவருக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த அஞ்சல், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துணிந்து விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அஞ்சலின் இந்தத் தீவிர முடிவைக் கேள்விப்பட்ட வினய் கௌதம், தான் செய்த தவறை உணர்ந்து அல்லது காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல், தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

   

காதல் கைக்கூடாத ஏக்கத்தில் வினய் எடுத்த தவறான ஒரு முடிவும், அதன்பின் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் அஞ்சல் எடுத்த முடிவும் இரு குடும்பத்தினரையும் மீள முடியாத சோகத்தில் தள்ளியுள்ளது. ஒரே நேரத்தில் காதலன் மற்றும் காதலி ஆகிய இருவருமே உயிரை மாய்த்துக் கொண்ட இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.