அய்யோ கடவுளே… பிரேக் எங்க போச்சி?… வண்டியை திருப்பப்போய் கடை ஷட்டரை நொறுக்கிய பெண்… நெட்டிசென்கள் அலறவிட்ட சிசிடிவி வீடியோ…!

By Swetha on ஆவணி 23, 2026

Spread the love

ராஜ்கோட்டில் உள்ள கோவிந்த்பாக் காய்கறி சந்தை அருகே பெண் ஒருவர் ஆக்டிவா வாகனத்தை ஓட்டப் பழகிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ‘யு-டர்ன்’ செய்ய முயன்றபோது, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் வாகனம் வேகமாகச் சென்று, சாலையோரத்திலிருந்த ஒரு பூட்டிய கடையின் ஷட்டர் மீது பலமாக மோதியது.

மோதிய வேகத்தில் அந்தப் பெண் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு தலைகீழாகக் கீழே விழுந்தார். இந்தச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வளவு பலமான விபத்து நிகழ்ந்தபோதிலும், நல்வாய்ப்பாக அந்தப் பெண் பெரிய காயங்கள் ஏதுமின்றி தப்பினார்.

   

வாகனம் ஓட்டப் பழகும்போது முறையான பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. புதிதாக வாகனம் பழகுபவர்கள் திறந்தவெளியிலும், போக்குவரத்து குறைந்த இடங்களிலும், சரியான கண்காணிப்புடன் பழக வேண்டும் என்றும், தலைக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.