“சீச்சீ… நான் ஆர்டர் போட்டது இதுவா..?” பார்சலை திறந்ததும் துர்நாற்றம்…! உணவில் கிடந்த முடி… பார்த்ததும் கொந்தளித்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர், ஜோமாட்டோ செயலி மூலம் பன்னீர், கோகோ கோலா மற்றும் தந்தூரி வெஜ் டேகோ உள்ளிட்ட ரூ.688 மதிப்பிலான உணவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், உணவு டெலிவரி செய்யப்பட்டு பார்சலைத் திறந்து பார்த்தபோது, ரூ.350 மதிப்புள்ள வெஜ் டேகோவில் இருந்து கெட்ட துர்நாற்றம் வீசியதுடன், அதில் சிறிய அளவிலான தலைமுடிகளும் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக ஜோமாட்டோ ஆதரவு மையத்தை தொடர்புகொண்ட போதிலும், நிறுவனத்திடம் இருந்து எந்தவொரு சரியான பதில்களும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், ஜோமாட்டோ ஒரு ஏமாற்று நிறுவனம் எனக் கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், “வாடிக்கையாளர்கள் பணத்தை மட்டும் கொடுப்பதில்லை, சுகாதாரமான உணவையும் எதிர்பார்க்கிறார்கள்; உணவுத் தரத்தில் இதுபோன்ற அலட்சியத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என ஜோமாட்டோ மற்றும் உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.