தினம்தோறும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் தான் நடைபெறுகிறது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டீசர்ட் அணிந்த இளைஞர் பைக் ஓட்ட, பின்னால் புடவை அணிந்த பெண் ஒருவர் பயணிக்கிறார். புடவையின் பல்லு சாலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அது பைக்கின் சக்கரத்தை நோக்கி இழுக்கப்படுகின்றது.
இதனை கவனித்த பின்புற பைக் ஓட்டுனர் மனித நேயத்துடன் எச்சரிக்கை செய்து உள்ளார். ஆனால் அந்தப் பெண் எச்சரிக்கையை அற்பமாக எடுத்துக்கொண்டு தவறாக புரிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில நொடிகளில் அவர் அஞ்சியதையே சந்தித்தார். அதாவது புடவை சக்கரத்தில் சிக்கி பைக் தள்ளி செல்ல பெண் கீழே விழுந்தார். இந்த சம்பவம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது உடைகள் தொடர்பான முன்னெச்சரிக்கை எவ்வளவு அவசியமென்பதை உணர்த்துகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
