“கல்யாணத்தை நிறுத்திட்டான்…” தொலைபேசி உரையாடல் ஆடியோ சர்ச்சை…! 4 கி.மீ ஓடி சென்று மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி ரகளை செய்த பெண்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், ஆடியோ ரிகார்டிங் சர்ச்சையால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நபர் திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த 23 வயது பெண் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த அனுபமா (23) என்பவருக்கும், சராசி அகில் பகுதியைச் சேர்ந்த அவதேஷ் குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் ஆடியோ ரிகார்டிங் ஒன்று அவதேஷ் குமாருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஆடியோ தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவதேஷ் குமார் திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

   

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனுபமா, தனது வீட்டில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்காய்பூர் கிராமத்திற்குச் சென்று, அங்கிருந்த உயரமான மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் மீது ஏறி கீழே இறங்க மறுத்து ரகளையில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினரும் உள்ளூர் மக்களும் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைப் பேச்சுவார்த்தை நடத்திப் பத்திரமாகக் கீழே இறக்கினர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள், பெற்றோரைக் வரவழைத்துப் பத்திரமாக ஒப்படைத்தனர்.