பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனின் மும்பை இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறப்படும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் துப்பாக்கி தோட்டாக்கள் ஊடுருவாத புல்லட்பரூஃப் கண்ணாடிக்கூண்டுக்குள் நின்று ரசிகர்களைச் சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள அமிதாப் பச்சனின் ‘ஜல்சா’ இல்லத்தின் வெளியே ஞாயிற்றுக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைச் சந்திக்கக் கூடுவது வழக்கமான நிகழ்வாகும். இந்நிலையில், அமிதாப் பச்சன் இல்லத்தைக் குறிவைத்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, மும்பை காவல் துறை சார்பில் அவரது இல்லத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
https://www.instagram.com/reel/DfMukzJz5g5/?utm_source=ig_web_copy_link&vrfl=NTc4MTIwNjQ2YQ==
இதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரசிகர் தரிசன நிகழ்வின் போது, வழக்கமான மேடைக்குப் பதிலாக 3 முதல் 4 படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டு முற்றிலும் துப்பாக்கித் தோட்டாக்கள் ஊடுருவாத வெளிப்படையான புல்லட்பரூஃப் கண்ணாடிக்கூண்டு தடுப்பு நிறுவப்பட்டது. அதனுள் நின்றபடி அமிதாப் பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து ரசிகர்களை நோக்கி கை அசைத்து வாழ்த்துகளைப் பரிமாறினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது.
