கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் உமா (28) என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த ராமாஞ்சேநயா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் உமா தனது கணவருடன் ஆந்திராவில் வசித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உமா கணவரை பிரிந்து தனது இரண்டு மகள்களுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
மேலும் ஒரு மகன் தனது தந்தையுடன் இருந்தார். உமா ரயில்வே கேண்டீன் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் அங்கு உமாவுக்கும் காஜா உசேன் (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் காஜா உசேன் இரவில் அடிக்கடி உமாவின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது உமா மற்றும் காஜா உசேன் இடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் காஜா உசேன் உமாவிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட நிலையில் தகராறு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு உமாவை தொடர்பு கொண்ட காஜா தனிமையில் சந்திக்க அழைத்துள்ளார்.
அதன்படி உமாவும் தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்திற்கு சென்ற நிலையில் பங்கு வந்த காஜா உசேன் பணம் கேட்டு தகராறு செய்தார். உமா பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காஜா உசேனை கைது செய்து விசாரித்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…