தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு நேற்றைய தினம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பணி முடிந்து வீடு திரும்புவதற்காக அவர் கால் டாக்ஸிக்காக காத்திருந்து அதில் ஏற முயன்றபோது, அதே நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக வேலை செய்யும் ஜார்க்கண்டைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், திடீரென அப்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து அத்துமீறி முத்தமிட்டுள்ளார்.
எதிர்பாராத இந்த செயலால் நிலைதடுமாறிய அந்தப் பெண் அதிர்ச்சியில் கூச்சலிட்டதும், அங்கிருந்து அந்த காவலாளி தப்பியோடிவிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கச்சிபவுலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றத்தை உறுதிப்படுத்தினர். பின்னர், தப்பியோடி தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை தீவிரமாகத் தேடிப் பிடித்து கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
