குஜராத் மாநிலம் ராஜ்ஹோட் – மோர்பி நெடுஞ்சாலையில் உள்ள ஹடாலா பாட்டியா அருகே, நள்ளிரவில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஆட்டோ ரிக்ஷா மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கொடூர விபத்தில் கார் மற்றும் ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் நடந்த இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற லாரி ஓட்டுநர் மற்றும் விபத்தின் பின்னணி குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
